Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதில் தாமதம் ஏன்? - ராமதாஸ் கேள்வி

    ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதில் தாமதம் ஏன்? – ராமதாஸ் கேள்வி

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என பாமக நிறுவனர்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

    இது தொடர்பாக, அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து, பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

    2017-ம் ஆண்டில் 3 மாத பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 

    நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதிலும், இதன் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு தொகுப்பு முறையில் உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதிலும் தேவையற்ற தாமதம் செய்யப்படுகிறோதோ என்று கேள்வி எழுகிறது. இதனை, மத்திய அரசு போக்க வேண்டும். 

    நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். பின், அந்த அறிக்கையை இறுதி செய்து இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும். 

    இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

    பொறியியல் கல்லூரிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....