Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்' - ராகுல் காந்தி பேச்சு

    ‘பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்’ – ராகுல் காந்தி பேச்சு

    இந்திய பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2)  செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

    ‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் குற்றவியல் பிரிவின் கீழ், நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து, தில்லியில் சோனியா காந்தி வசித்து வரும் இல்லத்திற்கு முன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது, ‘நேஷனல் ஹெரால்டு ஒரு மிரட்டல் முயற்சி. கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், நாங்கள் நரேந்திர மோடியை கண்டு பயப்படப்போவதில்லை’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மேலும் 10 பகுதிகளுக்கு ‘ராம்சர்’ அங்கீகாரம்; பிரதமர் மோடி பெருமிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....