Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'வாத்தி' எங்களை இழிவுபடுத்துகிறது; தனுஷ் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

    ‘வாத்தி’ எங்களை இழிவுபடுத்துகிறது; தனுஷ் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

    தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள ‘வாத்தி’ படத்தின் தலைப்பை மாற்றக்கோரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

    நடிகர் தனுஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ‘வாத்தி’ என்ற தலைப்பு ஆசியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும் சொல்லாக உள்ளது என புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதனால், வாத்தி படத்திற்கு ஆபத்து ஏதும் நேருமா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால், வாத்தி படம் திட்டமிட்டதுபோல் நாளை மறுநாள் வெளியாகும் என்றும், படத்தின் பெயரை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    தமிழகத்தில் 40 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை..காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....