Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காத்துக்கிடந்த ரசிகர்கள்... பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ

    காத்துக்கிடந்த ரசிகர்கள்… பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ‘அலைகடல்’ பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்துள்ளது. தற்போதும், திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

    இப்படத்தில் ரசிக்க பல விடயங்கள் இருந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்தான். பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, அலைகடல், தேவராளன் ஆட்டம் என அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 

    இந்த பாடல்களின் வீடியோக்களையும், அவ்வபோது பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டு வருகிறது. பல பாடல்கள் வெளியிடப்பட்டாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வந்தியத்தேவன் கதாப்பாத்திரமும், பூங்குழிலி காதாப்பாத்திரமும் இலங்கை நோக்கிச் செல்லும்போதும், வருகிற ‘அலைகடல்’ பாடலின் வீடியோ எப்போது வெளியாகுமென பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

    இந்நிலையில், ஸ்ரேயா கோஷல் குரலில் உருவாகிய அலைகடல் பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....