Wednesday, May 8, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திருமணமாகாமலே கர்ப்பமானது எப்படி? இணையத்தில் வைரலாகும் நடிகைகள் பதிவிட்ட பிரெக்னன்ஸி டெஸ்ட்!

    திருமணமாகாமலே கர்ப்பமானது எப்படி? இணையத்தில் வைரலாகும் நடிகைகள் பதிவிட்ட பிரெக்னன்ஸி டெஸ்ட்!

    நடிகை சயனோரா, நடிகை பார்வதி மற்றும் நடிகை நித்யா மேனன் ஆகியோரின் பதிவுகள் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    நடிகை நித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    34 வயதான நித்யா மேனன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நித்யா மேனன் ப்ரெக்னென்சி டெஸ்ட் செய்து பாசிடிவ் என வந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து எடுத்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    And, the Wonder Begins என கேப்ஷன் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

    உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்றும் வாழ்த்துக்கள் நித்யா மேனன் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, சில ரசிகர்கள் நித்யா மேனன் அம்மாவானதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர். இது கண்டிப்பாக நித்யா மேனனின் புதிய படத்தின் ப்ரொமோஷனாகத்தான் இருக்க வேண்டும் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    இதுபோல் ஒரு புகைப்படத்தை நடிகை பார்வதியும் நடிகை சயனோராவும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘மறைந்து ஒரு வருடமாகிறது’ – புகழ்பெற்ற நடிகருக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....