இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன் தம்பதியினருக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஜஸ்டின் பிரபாகரன் – தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் மிக முக்கியமான இசையமைப்பாளர்களுள் ஒருவர். பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து, டியர் காம்ரேட், மான்ஸ்டர், ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவரின் பாடல்களை ரசிப்போர் ஏராளமானோர்.
இதையும் படிங்க:உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமா ? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
இந்நிலையில், நேற்று ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்தது. கரோலின் சூசன் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன்படி, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, சாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா, கதிர் உள்ளிட்ட நடிகர்களும், பா.ரஞ்சித், நெல்சன், அதியன் ஆதிரை, ஃபிராங்களின் ஜேக்கப் போன்ற இயக்குநர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பாடகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.