Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

    அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

    அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச ஆட்டங்களை விளையாடவுள்ளன. 

    ஐபிஎல், தி ஹண்ட்ர ட், பிபிஎல் ஆகிய டி20 லீக் போட்டிகளுக்காக ஏப்ரல், மே, ஆகஸ்ட், ஜனவரி மாதங்களில் மிகக்குறைவான சர்வதேச ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

    2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

    இந்த நான்கு வருடங்களில் 5 வெள்ளைப் பந்து ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை, 2024-ல் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை, 2025-ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை, 2026-ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027-ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என முக்கியமான ஐசிசி போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறவுள்ளன.

    இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி போட்டிகளைத் தவிர 38 டெஸ்டுகள், 42 ஒருநாள், 61 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து; காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....