Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகண்ணீருடன் வெளியேறிய 'ரோஜர் ஃபெடரர்'! தோல்வியுடன் முடிவுக்கு வந்த 24 ஆண்டுகால சகாப்தம்

    கண்ணீருடன் வெளியேறிய ‘ரோஜர் ஃபெடரர்’! தோல்வியுடன் முடிவுக்கு வந்த 24 ஆண்டுகால சகாப்தம்

    டென்னிஸ் விளையாட்டில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் தொழில்முறை டென்னிஸிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றார். 

    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சில நாட்களுக்கு முன்பு தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். 

    அதன்படி, லண்டனில் நடைபெற்ற லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று ரோஜர் ஃபெடரர் விளையாடினார். இந்தப் போட்டியில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம் பெற்றுள்ள ரோஜர் ஃபெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் இணையை எதிர்கொண்டார். 

    ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் விடை பெற்றார். 

    இது குறித்து ரோஜர் ஃபெடரர் கூறும்போது, “இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது, கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடித்து தூள் கிளப்பிய ரோஹித், டிகே! 2வது டி20-யில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....