Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெற்றி பெற்ற ஜான் டெப்; ட்ரீட் செலவு மட்டுமே இவ்வளவு ரூபாயா?

    வெற்றி பெற்ற ஜான் டெப்; ட்ரீட் செலவு மட்டுமே இவ்வளவு ரூபாயா?

    ஒரு ஹாலிவுட் நடிகர், தன் மனைவியின் மீதே அவதூறு வழக்கை தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அவர் தரப்பு வெற்றியைப் பெற்றதோடு, கோடிக்கணக்கில் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுள்ளார். இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்காக, தனது நண்பர்களுக்கு இலட்சக்கணக்கில் விருந்தளித்துள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகரான ஜான் டெப் (வயது 58), தனது முன்னாள் மனைவியான நடிகை ஆம்பர் ஹேர்ட் (வயது 36), மீது அவதுாறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில், கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வழக்கில், சமீபத்தில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், நடிகர் ஜானி டெப்புக்கு அவருடைய முன்னாள் மனைவியான நடிகை ஆம்பர் ஹேர்ட், இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 115 கோடி வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது நடிகர் ஜானி டெப், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கி இருந்துள்ளார். தீர்ப்பு தனக்கு சாதகமாக வெளியானதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும், இழப்பீட்டுத் தொகையாக 115 கோடி ரூபாய் கிடைக்கப்போகிற மகிழ்ச்சியை, அங்குள்ள தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தார். இதனையடுத்து, நண்பர்களுக்கு விருந்தளிக்க விரும்பியுள்ளார். பிரிட்டன் நாட்டின் பிர்மிங்காம் நகரில் வாரணாசி என்ற பிரபலமான இந்திய உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் தான், தனது நண்பர்கள் 20 பேருக்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி இரவு வேளையில் விருந்தளித்துள்ளார்.

    ஏறக்குறைய 400 பேர் அமர்ந்து உணவருந்தக் கூடிய வாரணாசி உணவகத்தில், ஜானி டெப்பின் பாதுகாப்புக்காக, மற்ற விருந்தினர்கள் யாருக்கும் உணவகத்திற்கு உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. ஜானி டெப்பின் நண்பர்களுக்கு, பல வகையான இந்திய உணவுகளும், மதுபானங்களும் பரிமாறப்பட்டது. இந்த விருந்துக்கு ஏறத்தாழ 48 இலட்சம் ரூபாய் செலவானது. ஹாலிவுட் நடிகரின் இந்த செயல், அனைவருடைய கவனைத்தையும் ரன ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற ஜானி டெப்.. திரையுலகிற்கு திரும்புவாரா??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....