Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகோடிக் கணக்கில் ஏலம் போன வீரர்கள்; சென்னை அணியில் இணைந்தவர்கள் யார்?

    கோடிக் கணக்கில் ஏலம் போன வீரர்கள்; சென்னை அணியில் இணைந்தவர்கள் யார்?

    ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றனர். 

    இந்நிலையில், வருகிற ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது நேற்று கொச்சி நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க பலத்த போட்டி நடைபெற்றது. 

    குறிப்பாக, சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கிரீன், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்களுக்கான போட்டி என்பது பலமாக இருந்தது. சென்னை அணியை பொறுத்தவரையில், பிராவோ இல்லாத காரணத்தினால் வேகப்பந்து வீச்சாளரை குறிவைத்தனர். 

    அதனடிப்படையில் சாம் கரனை ஏலமெடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்றது. ஆனால், அது நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, கடும் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. 

    உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கி வரும் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு வந்துள்ளது, சென்னைக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சென்னை வாங்க பலத்த முயற்சி செய்த சாம் கரனை பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு வாங்கியது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையை சாம் கரன் படைத்துள்ளார். மேலும், கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பையும் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்கு லக்னோ அணியும் வாங்கின. 

    இந்த ஐபிஎல் ஏலத்தில் சொன்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

    1. பென் ஸ்டோக்ஸ் – ரூ. 16.25 கோடி

    2.கைல் ஜேமிசன் – ரூ. 1 கோடி

    1. நிஷாந்த் சாந்து – ரூ. 60 லட்சம்
    2. ரஹானே ரூ.50 லட்சம்
    3. ஷீக் ரஷீத் – ரூ. 20 லட்சம்
    4. அஜய் மண்டால் – ரூ. 20 லட்சம்
    5. பகத் வர்மா – ரூ. 20 லட்சம்

    தனது முதல் இன்னிங்ஸை முடித்த இந்தியா..பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேசம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....