வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஷமி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இதன் முதற்கட்டமாக வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி டக்காவில் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டிக்காக, இரு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஷமி வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக வங்கதேச அணியின் தேர்வுக் குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென்.
வங்கதேசம் அணி:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, யாசிர் அலி, ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன் துருபோ, எபடோட் ஹொசைன், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் ( விக்கெட் கீப்பர்) நூர் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது மற்றும் தஸ்கின் அகமது.
புரோ கபடி போட்டி; அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரபிரதேச யோதாஸ்