Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தியாவில் மேலும் 10 பகுதிகளுக்கு 'ராம்சர்' அங்கீகாரம்; பிரதமர் மோடி பெருமிதம்

    இந்தியாவில் மேலும் 10 பகுதிகளுக்கு ‘ராம்சர்’ அங்கீகாரம்; பிரதமர் மோடி பெருமிதம்

    இந்தியாவில் மேலும் 10 பகுதிகளுக்கு ‘ராம்சர்’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

    ஈரான் நாட்டில் உள்ள கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் எனும் நகரில், 1971-ம் ஆண்டு ராம்சர் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது சதுப்புநிலங்களை பராமரிப்பது ஆகும். ஆதலால், ராம்சர் பட்டியலில் இணையும் பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் 10 சதுப்பு நிலங்கள் தற்போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் காப்பகம், கோவாவில் உள்ள நந்தா ஏரி, ஓடிஷாவில் உள்ள சட்கோசியா காப்பகம், மத்திய பிரதேசத்தில் உள்ள சிர்பூர் சதுப்புநிலம், தமிழகத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர் சதுப்புநிலம், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் மற்றும் உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகியவை ராம்சர் அங்கீகாரம் பெற்ற தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது:

    சுற்றுச்சூழல் விரும்பிகள் அனைவரும் மகிழும்படியாக இந்தியாவில் மேலும், 10 சதுப்புநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே, கடந்த ஜூலை மாதம் 5 சதுப்புநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த அங்கீகாரம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை ஆழப்படுத்தும்.

    இவ்வாறு, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு ராம்சர் அங்கீகாரம்; ‘மகிழ்ச்சி’ என பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....