Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு; நியூசிலாந்து பந்துவீச்சு எடுபடுமா?

    இந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு; நியூசிலாந்து பந்துவீச்சு எடுபடுமா?

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தற்போது 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. 

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றில் முதலாவது இருபது ஓவர் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியானது ஈரப்பதம் காரணமாக, போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. 

    டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர்.  ஃபின் ஆலன் 3 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த மார்க்கும் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய கிளன் ஃபிலிப்ஸ், கான்வேவுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.  ஃபிலிப்ஸ் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கான்வே 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு, களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    மொத்தத்தில், நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இந்திய அணிச் சார்பில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

    இந்திய அணி தற்போது 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. 

    “ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்” – அமைச்சர் ரகுபதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....