Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை; ஏற்றுக்கொள்ளாத இந்தியா!

    சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை; ஏற்றுக்கொள்ளாத இந்தியா!

    மீத்தேன் வாயு புவி வெப்பமாக காரணமான வாயுக்களில் இரண்டாவது முக்கியமான வாயுவாக உள்ளது. இந்த வாயுவின் உமிழ்வுக்கு முக்கிய காரணமாக விவசாயம் விளங்குகின்றது. விவசாயமானது மீத்தேன் வாயுவின் மொத்த அளவில் நான்கில் ஒரு பகுதியினை பல்வேறு விதமாக வெளியிட்டு வருகின்றது. விவசாயத்தை தொடர்ந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைப்புகள், நிலக்கரி சுரங்கங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளாலும் மீத்தேன் வாயு உமிழப்பட்டு வருகின்றது.

    சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் உலகின் ஒட்டுமொத்த மீத்தேன் வாயு உமிழ்வில் பாதிக்கு நிகராக மீத்தேன் வாயுவை உமிழ்ந்து வருகின்றன. பல்வேறு ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ஆதாரங்களின் வாயிலாகவும் தங்களது பங்கினை அளித்து வருகின்றன. இதனால் புவியின் வெப்பநிலை மற்றும் காலநிலை அமைப்பினையும் பாதிக்கின்றது.

    மீத்தேன் வாயு புவி வெப்பமாவதில் அதிக பங்கு வகிக்கின்றது. இஃது கார்பன் டை ஆக்சைடை விட 8 மடங்கு அதிகமாக புவியினை வெப்பமாக்கும் திறன் கொண்டது. மீத்தேன் வாயு தான் புவி வெப்பமாதலில் மூன்றில் ஒரு பங்கினை வகிக்கின்றது.
    மீத்தேனின் இத்தகைய தன்மையை உலக நாடுகள் உணர்ந்ததன் விளைவே 2021ல் கிலாஸ்கொ, ஸ்காட்லந்து நாட்டில் நடைபெற்ற cop26 மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டு வந்த தீர்மானம். அதன்படி 2030ஆம் ஆண்டிற்குள் மீத்தேன் வாயு உமிழ்வின் அளவினை, 2020 ஆம் ஆண்டளவில் இருந்து 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

    100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டாலும் மீத்தேன் வாயு உமிழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்ற ரஷ்யா, சீனா, இந்தியா, போன்ற நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது இத்தீர்மானத்தின் பின்னடைவே ஆகும்.

    மீத்தேன் உமிழ்வு குறைப்பு புவி வெப்பமாவதை தடுக்க புதிய முயற்சியாக இருப்பினும், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தினை தடுக்கும் கூடுதல் முயற்சி ஆகும். ஏனெனில் மீத்தேன் மூலக்கூறுகள் கார்பன் டை ஆக்சைடை காட்டிலும் அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை.

    cop26ன் முக்கிய குறிக்கோளாக 2050க்குள் பசுமை குடில் வாயுக்கள் உமிழ்வினை பூச்சியமாக்குவதே. அதாவது புவியின் வெப்ப அளவை இனி உயர்த்தாமல் இருப்பதுவே. இந்த தீர்மானம் மீத்தேன் வாயுவினை உமிழும் நாடுகளை உள்ளடக்கியது. இந்த நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியில் 70 சதவிகிதம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘இனி கிரிக்கெட் கிடையாது’; ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மித்தாலி ராஜ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....