Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமழை குறுக்கீட்டால் என்ன; அதிரடியால் வெற்றி வாகை சூடிய இந்தியா!

    மழை குறுக்கீட்டால் என்ன; அதிரடியால் வெற்றி வாகை சூடிய இந்தியா!

    இந்திய அணி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் டி20 போட்டி நேற்று இரவு நடந்தது. போட்டி 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய தருணத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி தொடங்குவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இதனால், 20 ஓவர் போட்டி, 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணிக்கு முதல்முறையாக கேப்டன் பதவி வகிக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏற்கனவே, நடந்து முடிந்த ஐபிஎல் 2022 சீசனில், குஜராத் லயன்ஸ் அணிக்கு தலைமை வகித்து கோப்பையை வென்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியானது, நேற்று டப்ளின் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இந்த போட்டியில் டாஸ் போட்ட உடனேயே மழை தொடங்கியது.

    இரவு 8.50 மணிக்கு தொடங்கிய மழை நீண்ட நேரமாகியும் பெய்து கொண்டே இருந்தது. இறுதியில் இரவு 11.20 மணிக்கு மழை நின்ற பிறகு, போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆடும் அணியில் இடம்பெற்று, அறிமுகமானார்.

    இந்தியா – அயர்லாந்து!

    முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். ஓப்பனிங் வீரர்கள் ஸ்ட்ரிலிங் 4 ரன், பால்பிர்னி ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டாலானி 8 ரன், டக்கர் 18 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறியதால், அயர்லாந்து அணி 8.4 ஓவர்களில் 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    100 ரன்களுக்குள்ளாகவே, அயர்லாந்து அணியை சுருட்டி விடுவார்கள் என எதிர்பார்த்த தருணத்தில், ஒரே ஒரு வீரர் மட்டும் தனது அபார பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். 3வது விக்கெட்டிற்கு களம் கண்ட ஹேரி டெக்டர் என்ற வீரர் மட்டும், கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 64 ரன்களை விளாசி தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். இதனால் 12 ஓவர்களில் அயர்லாந்து 4 விக்கெட்டுகளை இழந்து, 108 ரன்களை சேர்த்து நல்ல ஸ்கோரை எட்டியது. இந்தியா தரப்பில் சஹால், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

    109 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ஓப்பனிங்கிலேயே மிகப்பெரிய ட்விஸ்ட் இருந்தது. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு பதிலாக தீபக் ஹூடா – இஷான் கிஷானுடன் சேர்ந்து ஓப்பனிங் செய்தனர். மிகச் சிறப்பாக ஆடிய ஹூடா 29 பந்துகளை சந்தித்து 47 ரன்களை குவித்தார். இஷான் 11 பந்துகளில்ல் 26 ரன்களை எடுத்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    இதன் பிறகு வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 12 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களை சேர்க்க, இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    எட்டாவது மாடியிலிருந்து குதித்த நோயாளி!! உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....