Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நீ என்ன கிறிஸ்டியனா.? கெட் அவுட் - செய்தியாளரிடம் மீண்டும் வரம்பு மீறி கோவப்பட்ட எச்.ராஜா!

    நீ என்ன கிறிஸ்டியனா.? கெட் அவுட் – செய்தியாளரிடம் மீண்டும் வரம்பு மீறி கோவப்பட்ட எச்.ராஜா!

    பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளை வைத்துக்கொண்டு, ‘நீங்கள் எல்லாம் இந்து விரோதிகள். நீங்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள். நீங்கள் திட்டமிட்டு இந்துவுக்கு எதிராக பேசுகிறீர்கள். இந்துவிற்கு எதிராகத்தான் பேச வேண்டும் என்று திட்டமிட்டு நீங்கள் பேசுகிறீர்கள். எனக்கு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் எல்லாம் உண்மைகளை படிப்பதே இல்லை. கால்டுவெல் எதையோ எழுதி வைத்து ‘இருக்கிறான்’ என்று அதை படித்தீர்கள். நீங்கள் யாருமே படிக்கிறதே இல்லை’ என்றார். 

    மேலும், ‘அவன்’ எழுதிய கற்பனைகளை, புனைவுகளை படிக்கிறீர்கள், என்று எச். ராஜா கூறினார். உடனே ஒரு செய்தியாளர் மகாபாரதம் மாதிரி புனைவா, என்று கேட்டார். 

    இதையும் படிங்க:நாட்டிற்காக வீர மரணம்: ராணுவ வீரர்கள் மத்தியில் மறக்க முடியா வலியை ஏற்படுத்திச் சென்ற “ஜூம் நாய்”…!

    இதை கேட்டு கோபம் அடைந்த எச். ராஜா உடனடியாக தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டார். “நான் உங்களை கண்டிக்கிறேன்.. நீ என்ன கிறிஸ்டியனா.? ..கெட் அவுட்..”, என்று கடும் கோவத்தில் ஆவேசமாக கூறினார். 

    இதற்கு செய்தியாளர், ‘புனைவு என்று சொல்கிறீர்கள்.. நீங்கள் ஒரு புத்தகத்தை சொல்லும்போது நானும் சொல்ல கூடாதா. அதனால்தான் மகாபாரதம் என்று சொன்னேன். அதுவும் புனைவு தானே’ என்றார். இதனால் இன்னும் கோபம் அடைந்த எச். ராஜா சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார். 

    முன்னதாக, ராஜ ராஜ சோழன் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது எச்.ராஜா கோவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....