Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வருங்கால பிரதமரே: அண்ணாமலையை சூடேற்றும் காயத்ரி ரகுராம்!

    வருங்கால பிரதமரே: அண்ணாமலையை சூடேற்றும் காயத்ரி ரகுராம்!

    அரசியலில் புகழ்ந்து பேசுவதும், இகழ்ந்து பேசுவதும் சர்வ சாதாரணமாக நடக்கும். ஆனால், முன்னாள் திரைப்பட நடிகையான காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்வது போலப் இகழ்ந்து பேசியிருப்பது, பாஜகவினர் இடையே மோதல்கள் இருப்பது தெளிவாகிறது.

    வருங்கால பிரதமரே, வருங்கால முதல்வரே என அண்ணாமலைக்காக கூறியிருக்கிறார் காயத்ரி ரகுராம். இதோடு அவர் விட்டிருந்தால், அண்ணாமலையை புகழ்கிறார் என்று சொல்லிவிடலாம். ஆனால் அடுத்தடுத்து அவர் கூறியிருப்பது தான், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால இந்திய பாதுகாப்பு அமைச்சரே, வருங்கால எம்.பியே, வருங்கால எம்.எல்.ஏ. என அடுக்கிக் கொண்டே போனதால் இது வஞ்சப்புகழ்ச்சியா? என்ற கேள்வி எழுகிறது. அண்ணாமலை மீதான கடுப்பில் தான் காயத்ரி ரகுராம் இப்படி கூவியிருக்கிறார் என்கிறார்கள், அரசியல் பிரமுகர்கள்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ”நமது வருங்கால பிரதமர் அல்லது இந்திய பாதுகாப்பு அமைச்சர் அல்லது எம்.பி. அல்லது சி.எம். அல்லது எம்.எல்.ஏ. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்று கடுப்பில் கூவியுள்ளார் காயத்ரி ரகுராம். நம்பிக்கை இன்மையிலிருந்து நம்பிக்கை வரை, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, அதிலிருந்து விஸ்வ குரு எனவும் புகழ்ந்துள்ளார். இவர், எடுத்து வைக்கும் அடி அனைத்தும் நிஜ சிங்கத்தினுடைய வெளிப்பாடு எனவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இது வஞ்சப்புகழ்ச்சி தான் என்று கட்சியினரே குற்றம் சாட்டினர்.

    ”சாதாரண விவசாயி குடும்பம் முதல் PSG மாணவர், 8 ஆண்டுகள் IPS வரை. TN BJP இன் துணைத் தலைவர் முதல் TN BJP தலைவர் வரை அவரது வளர்ச்சி கற்பனை செய்ய முடியாதது. திமுக இன்று அதிருகிறது. டெல்லி பாராட்டுகிறது. இளைஞர்கள் எங்கள் சகோதரருக்கு பின்னால் இருக்கிறார்கள். எப்படி வளர வேண்டும், எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் சிறந்த உத்வேகம்”என்று அண்ணாமலையை புகழ்ந்துள்ளார் காயத்ரி ரகுராம்.

    தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவிற்கு தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். இந்தப் பதவியை அவரிடமிருந்து பறித்துவிட்டு, பெப்சி சிவக்குமாருக்கு கொடுத்துவிட்டார் அண்ணாமலை. இவரின் இந்த செயலால் தான், இப்படி வஞ்சப்புகழ்ச்சியாக பாடிக் கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம். தமிழகத்தின் பாஜக தலைவராக எல். முருகன் இருந்தவரையில், காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகு காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் இடையே சில மோதல்கள் நடந்துள்ளது என அண்ணாமலையின் ஆதரவாளர்களே தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....