Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஹர்ஷல் பட்டேல் உடன் நடந்த மோதலுக்கு என்ன காரணம்? - மனம்திறந்த ரியான் பராக்!

    ஹர்ஷல் பட்டேல் உடன் நடந்த மோதலுக்கு என்ன காரணம்? – மனம்திறந்த ரியான் பராக்!

    2022 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ராஜஸ்தான்-பெங்களூரு இடையேயான போட்டியில் இந்திய இளம் வீரர்களான ஹர்ஷல் படேல்-ரியான் பராக் மோதிக் கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. இவர் பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர். கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வருகிறார்.

    இது குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரை அளித்த பிறகும் ரியான் பராக் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். எனினும் ஃபில்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக், 17 கேட்ச்சுகளை பிடித்தார்.

    இந்த ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ரியான் பராக் இக்கட்டான சூழலில் களமிறங்கி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவு பெற்றதை அடுத்து ரியான் பராக் டிரெஸ்ஸிங் அறை நோக்கி செல்ல திடீரென ஹர்ஷல் பட்டேல் அவரை நோக்கி வேகமாக வந்தார். இருவரும் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் அணியை சேர்ந்த உதவியாளர் ஒருவர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்.

    பின்னர் அதே போட்டியில் போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரர்களும் எதிரணி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அனைத்து வீரர்களுக்கும் கைக்குலுக்கி வந்தார். அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டியபோது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இந்த நிகழ்வும் அப்போது பேசுபொருளானது.

    இதனால் களத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் ஹர்சல் படேல் இருப்பது தெரிந்தது. ஹர்சல் பட்டேலுடன் ரியான் பராக் நடந்து கொண்ட விதம், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த மோதல் குறித்து ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.

    அதுபற்றி ரியான் பராக் கூறுகையில்,

    ”கடந்த ஆண்டு நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் அவுட் ஆனேன். அப்போது என்னை டிரெஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கைகாட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. ஹோட்டலுக்கு வந்து மறு ஒளிபரப்பை டிவியில் பார்க்கும் போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது. இந்த நிலையில், மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. இதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இது தான் மோதலுக்கு காரணம். அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து, ‘நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்’ என்று கூறினார். ஆனால் போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கைக் குலுக்காமல் சென்றுவிட்டார். அது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானமாக எனக்குத் தெரிந்தது” என்று கூறினார்.

    வருங்கால பிரதமரே: அண்ணாமலையை சூடேற்றும் காயத்ரி ரகுராம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....