Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: நேற்றைய ஆட்ட முடிவுகள் என்னென்ன?

    கால்பந்து உலகக் கோப்பை: நேற்றைய ஆட்ட முடிவுகள் என்னென்ன?

    கத்தாரில் நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், நேற்று நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. 

    ஜப்பான் மற்றும் கோஸ்ட்டா ரிக்கா 

    இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி வந்த நிலையில், கோஸ்ட்டா அணி சார்பில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் 81-ஆவது நிமிடத்தில் கீஷர் ஃபுல்லர் ஒரு கோல் அடித்தார். இதன் பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்காததால், இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணி  ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

    கனடா மற்றும் குரோஷியா 

    இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் குரோஷியாவுக்காக ஆண்ட்ரே கிரமாரிக் (36′, 70′), மார்கோ லிவாஜா (44′), லோவ்ரோ மேஜர் (90+4′) ஆகியோர் கோலடிக்க, கனடாவுக்காக அல்ஃபோன்சோ டேவிஸ் (2) ஸ்கோர் செய்தார். 

    இதன்மூலம், இந்த ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. 

    இந்த ஆட்டத்தில் கனடா வீரர் அல்ஃபோன்சோ அடித்த கோல், நடப்பு உலகக் கோப்பை போட்டியின் அதிவேக கோலாக (ஆட்டம் தொடங்கி 67 விநாடிகள்) பதிவானது. 

    உலகக் கோப்பை போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றுள்ள கனடா, போட்டி வரலாற்றில் அடித்திருக்கும் முதல் கோல் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பெல்ஜியம் மற்றும் மொராக்கோ 

    நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் இந்த இரு அணிகள் மோதின. இந்த் ஆட்டத்தில் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.

    ஆனால், இரண்டாவது பாதியின் 73-ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். ஆட்டத்தின் 92-ஆவது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார். இறுதியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதித்தது. 

    ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி 

    இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் முதல் பாதியில் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ஸ்பெயின் வீரர் மொராட்டா இரண்டாவது பாதியில் 62-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இதன்பின்பு, ஜெர்மனி வீரர் நிக்லஸ், 83-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து தோல்வியை தவிர்த்தார்.

    இதன்மூலம், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....