Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

    இங்கிலாந்து அணி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வந்தது. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள நிலையில், இதற்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடர், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்களில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read : காமன்வெல்த்; மல்யுத்த வீரர்களால் இந்தியாவுக்கு பதக்க மழை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....