Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    குத்துச்சண்டைப் போட்டியை மையமாக வைத்து உருவான திரைப்படம்தான், லைகர். கடந்த ஆக்ஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகிய இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே போன்றோர் நடித்தனர். இயக்குநர் கரன் ஜோகர், நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். 

    தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் சறுக்கலை சந்தித்ததாகவே கூறப்படுகிறது. 

    இச்சூழலில்தான், லைகர் திரைப்படத்திற்கு அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ததாகவும், அந்நிய செலாவணி சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெறப்பட்டதாகவும் பக்கா ஜட்சன் என்பவரால் புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இப்புகாரை அடுத்து, புரி ஜெகநாத், சார்மி ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன், ஹைதராபாத் அமலாக்கத் துறையினர் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    மேலும், கரன் ஜோகர் விசாரிக்கப்படலாம் என்ற கருத்தும் சமூகவலைதளங்களில் உலவி வருகிறது.

    ‘இளைஞர்களின் பிரியமான பவனி’ – பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....