Saturday, April 27, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மம்முட்டி படத்தின் மீது பிரபல தமிழ் இயக்குநர் குற்றச்சாட்டு!

    மம்முட்டி படத்தின் மீது பிரபல தமிழ் இயக்குநர் குற்றச்சாட்டு!

    நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது என இயக்குநர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. இப்படத்தை ஜல்லிக்கட்டு படம் மூலம் உலகளவில் புகழ் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் மீது தமிழ் திரையுலக இயக்குநர் ஹலிதா ஷமீம் ‘ஏலே படத்திற்காக உருவாக்கப்பட்ட அழகியல்களை திருடி விட்டதாக  குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

    ‘ஏலே’ படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
    அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.

    இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது.
    ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை.
    Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.

    நான் அறிமுகப்படுத்திய ‘சித்திரை சேனன்’ நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.

    படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன்.
    நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!

    எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய இளைஞர்; வனத்துறை வெளியிட்ட காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....