Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் படம்; வெளியான மோஷன் போஸ்டர்!

    மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் படம்; வெளியான மோஷன் போஸ்டர்!

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. 

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக தோனி விளையாடினாலும், விரைவில் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஒய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி திரைப்படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். 

    அந்த வகையில், மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் ‘லெட்ஸ் கேட் மேரிட் (lets get married)’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

     ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் வேலைகளை தோனியின் மனைவி சாக்‌ஷி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    காதல் திருமணம் செய்த பெண்னை கணவர் முன்னே தூக்கிச் சென்ற சம்பவம்; பரபரப்பு காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....