Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷ் உடன் இணைந்த சூப்பர்ஸ்டார்...வெளிவந்த கேப்டன் மில்லர் ரகசியம்...

    தனுஷ் உடன் இணைந்த சூப்பர்ஸ்டார்…வெளிவந்த கேப்டன் மில்லர் ரகசியம்…

    கேப்டன் மில்லர் திரைப்படத்தில், நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ், ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாக உள்ளது. 

    கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், சில்லுக்கருப்பட்டி திரைப்பட புகழ் நிவேதிதா சதிஷூம் நடித்து வருகின்றனர். 

    சமீபத்தில், தென்காசியில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தனுஷின் அண்ணனாக ஷிவ் ராஜ்குமார் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

    dhanush

    கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

    ‘நான் டீசன்டான ஆளு’ – தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் வடிவேலு..குஷியில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....