Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சமூக நீதியின் தூணாக விளங்கிய வலிமை வாய்ந்தவரின் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

    சமூக நீதியின் தூணாக விளங்கிய வலிமை வாய்ந்தவரின் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

    உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவருமான முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவர்களில் மிக முக்கியமான ஒருவர் தான் முலாயம் சிங் யாதவ் .இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் கூட . 1989 முதல் 91 , 1993 முதல் 95 , 2003 முதல் 2007 வரை என மூன்று முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவரின் மகன்தான் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் . 1996 முதல் 1998 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர் . அதுமட்டுமின்றி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி கண்டு ,உ.பி சட்டசபைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டதோடு , உ.பி யில் அசைக்க முடியாத சக்தியாகவும் வளம் வந்தவர் .தற்போது ஆறாவது முறையா அவர் லோக்சபா எம்.பியாகவும் பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில்தான் 82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கள் கிழமை வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ,பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இச்சமயத்தில்தான் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை முகலாயம் சிங் யாதவ் அவர்களின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது . இதனையடுத்து முகலாயம் சிங் அவர்களின் மறைவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் .

    மோடி அவர்கள் தெரிவித்துள்ள தனது இரங்கல் பதிவில், நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்தபோது முலாயம் சிங் யாதவ்-ஜியுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு தொடர்ந்து இருந்து வந்தது , அவருடைய கருத்துக்களைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரின் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார் .

    அதேபோல் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ,முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவுக்காக அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

    இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும், உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவருமான முகலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது .இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டீர்க்காக மிகவும் பாடுபட்டவர் .மதச்சார்பற்ற கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.அவரது இழப்பு நிச்சயமாக ஈடுபாடு செய்ய முடியாத ஒன்று .

    அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .முகலாயம் சிங் அவர்களின் இறுதிச் சடங்கில் திமுக சார்பில் ,எங்களது கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு அவர்கள் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார் .

    இதைப்போலவே பாமக கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளார் .அந்த இரங்கல் செய்தியில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் தலைவர் திரு முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். வட இந்தியாவில் அவர் ஒரு அரசியல் சக்தியாக இருந்தார்.சமூக நீதியின் தூணாக விளங்கும் அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பாகும். எனது அன்புச் சகோதரர் திரு.அகிலேஷ் யாதவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார் .

    இவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் ,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ,உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் முகலாயம் சிங் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் .

    இதையும் படிங்க: 2026ல் தான் மதுரை எய்ம்ஸ் பணி முடியும்! தாமதத்திற்கு காரணம் சொன்ன மத்திய இணையமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....