Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்என்னது, ஓபிஎஸ் இனி ஒருங்கிணைப்பாளரும் இல்லையா? - சி.வி.சண்முகம் அதிரடி கருத்து!

    என்னது, ஓபிஎஸ் இனி ஒருங்கிணைப்பாளரும் இல்லையா? – சி.வி.சண்முகம் அதிரடி கருத்து!

    அதிமுகவில் உள்கட்சி பூசல் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டை போல் இரு அணிகளாக பிளவுப்பட்டு கிடக்கிறது, அதிமுக. கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கு நேற்றைய முன்தினம் உச்சகட்டத்தை எட்டியது. அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் நேற்றைய முன்தினம் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வத்தை வரவேற்கக் கூட இல்லை.

    மேலும், ஓபிஎஸ் விழா மேடைக்கு வருவதிலிருந்து தீர்மானங்களை முன்மொழிந்தது, சபையிலிருந்து வெளியேறியது, அவர் மீது தண்ணீர் பாட்டில் அடிக்கப்பட்டது என வரிசையாக அவர் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்படாததால், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

    மேலும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, இதையெல்லாம் ஓபிஎஸ் மறுக்கிறாரா என்றும் அவர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் சி.வி. சண்முகம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது என்ன?

    ” நடந்த பொதுக்குழு கூட்டம் முறையாகக் கூட்டப்படவில்லை. இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரமில்லை என்று வைத்தியலிங்கம் சொல்லியிருக்கிறார். பொதுக் குழுவானது கூலியாட்களை வைத்தும் அடியாட்களை வைத்தும் நடத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக முறைப்படி தேர்வுசெய்யப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். கழக அமைப்புத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிகளை பொதுக் குழு அங்கீகரிக்காததால், தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். ஆகவே பொதுக் குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்பது அவரது வாதம்.

    இதற்கு விளக்கம் அளித்து சி.வி.சண்முகம் கூறியதாவது: மீண்டும் பொதுக் குழுவைக் கூட்ட அதிகாரமில்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். ரவுடித்தனமாக அவர் பேசியிருக்கிறார்.

    பொதுக் குழுவை பொதுச் செயலாளர் கூட்டலாம். இப்போது அந்தப் பதவி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் பொதுக் குழுவைக் கூட்டலாம். ஆண்டுக்கு ஒரு முறை பொதுக் குழுவை கூட்டவேண்டும். பிறகு தேவைப்படும் நேரத்தில் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உண்டு. இல்லாவிட்டால், பொதுக் குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், அதாவது மொத்த உறுப்பினர்களான 2,665 பேரில் ஐந்தில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டு கட்சி அலுவலகத்தில் கொடுத்தாலே, கொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் பொதுக் குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும்.

    அப்படி கடிதம் கொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். எங்கேயுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியைப் பெற்று கூட்ட வேண்டும் என்று விதிகளில் சொல்லப்படவில்லை. அறிவிப்பு கிடைத்த ஒரு மாதத்திற்குள் கூட்ட வேண்டுமென்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வைத்தியலிங்கம் சொல்லியிருக்கும் கருத்து முழுக்க முழுக்கத் தவறு.

    மேலும் சி.வி. சண்முகம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்,

    பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதி காலை ஸ்ரீ வாரி மண்டபத்தில் கூட்டலாம் எனக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தது யார்? இதற்கான கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி கே.பழனிசாமியும்தான் கையெழுத்திட்டனர். பொதுக் குழு கூடியது செல்லாது என்றால், இந்தக் கடிதத்தில் பன்னீர்செல்வம் தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டாரா? நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது அதிகாலை மூன்று மணிக்கு நடந்த வழக்கில் இவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நாங்கல் பொதுக் குழுவை கூட்ட ஆட்சேபமில்லை என்று சொன்னார்களா, இல்லையா?

    அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில விதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியும் பாதுகாப்பு அளிக்கச் சொல்லியும்கூறி பொதுக் குழுவிற்கு அனுமதி அளித்திருக்கிறது. பொதுக் குழுவுக்கு வந்த உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அது வருகைக்கான கையெழுத்து இல்லை. மாறாக, பொதுக் குழுத் தீர்மானங்களை நாங்கள் ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம் என்பதற்கான பதிவேடு. 2,263 பொதுக் குழு உறுப்பினர்கள் முறைப்படி வந்தார்கள். வைத்தியலிங்கம் மட்டும்தான் ஓ பன்னீர்செல்வம் காரில் சொகுசாக உள்ளே வந்து விட்டார்.

    அவைத் தலைவரை முறைப்படி தேர்வு செய்யவில்லை என்று வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு அவைத் தலைவரை எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோதான் நியமனம் செய்து அறிவிப்பார்கள். ஆனால், சட்டம் அப்படி சொல்லவில்லை. ஜெயலலிதா அறிவிப்பார். அவர் என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அடுத்த பொதுக் குழுவில் அதற்கு அங்கீகாரம் பெறப்படும். ஆகவே, ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்தான் அவைத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென்பது விதியில்லை. பொதுக் குழுவின் உறுப்பினர்கள் கூடி, தலைமைக் கழகத்தின் அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளரோ தேர்வு செய்ய முடியாது.

    தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத் தலைவராக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கையொப்பமிட்டு அறிவித்தார்கள். இந்தப் பொதுக் குழுவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தாரா இல்லையா?

    பொதுக் குழுவுக்கு எந்த விதியையும் உருவாக்கவும் மாற்றவும் நீக்கவும் அதிகாரம் உண்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்வு செய்வது குறித்து பொதுக் குழுவில் அங்கீகாரம் பெற வேண்டும். அதைப் பெறாததால், அந்தப் பதவிகள் நேற்றோடு காலாவதியாகிவிட்டன. ஆகவே இனி ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் பொருளாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமைக் கழகச் செயலாளர். இதுதான் இன்றைய நிலை.

    பொதுக் குழு உறுப்பினர்களில் 2550 பேர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர் பக்கம் சுமார் 40 பேர் இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதால் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்பதற்காக 11 ஜூலை பொதுக் குழு கூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். அதன்படி பொதுக் குழு கூட்டப்படும்,” என சி.வி. சண்முகம் பேசியிருக்கிறார்.

    இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும் – ராகுல் காந்தி விமர்சனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....