Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்35 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு - இடைக்கால...

    35 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு – இடைக்கால தடை

    கடந்த மாதம் பாஜக ஆதரவாளர் மற்றும் யூடியூப் சேனல் மூலம் திமுகவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த கார்த்திக் கோபிநாத்தை போலீசார் சுமார் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி கைது செய்தனர்.

    இந்நிலையில், கோவில் சிலைகள் புனரமைப்பு பணிக்கு நிதி திரட்டி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிரான போலீஸ் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கோவில் சிலைகள் புனரமைப்பு பணிக்கு ‛மிலாப்’ என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி நிதி திரட்டி, மோசடி செய்துவிட்டார் என்ற வழக்கில், ‘யூ டியூபர்’ கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் கேட்டுள்ளதாகவும் இன்னும் வழங்கப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, போதுமான அவகாசம் அளித்தும் காவல்துறை ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்பதால் எப்.ஐ.ஆர்.,க்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடத்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இவர் பணம் வசூலித்த 34 லட்சம் ரூபாயும் எந்த வங்கி கணக்கில் வசூல் செய்துள்ளார் என்பது குறித்தும் கோபிநாத்தின் தனிப்பட்ட இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி ஆய்வு செய்வதற்காக போலீசார் முடிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும் – ராகுல் காந்தி விமர்சனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....