Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசின்சினாட்டி டென்னிஸ் போட்டி.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஃபேல் நடால்

    சின்சினாட்டி டென்னிஸ் போட்டி.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஃபேல் நடால்

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் தோல்வி அடைந்தார். 

    உலகின் 3-ம் வீரரான ரஃபேல் நடால் கடைசியாக ஜூலையில் விம்பிள்டனில் களம் கண்டிருந்தார். அடிவயிற்றில் காயம் காரணமாக அந்தப் போட்டியின் அரையிறுதிச்சுற்றிலிருந்து விலகிய அவர், காயத்துக்காக 6 வாரங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்தார்.

    ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு, சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் கலந்துக் கொண்டார். இந்தப் போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த நடால் நேரடியாக 2-ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், குரோஷியாவின் இளம் வீரர் போர்னா கோரிச்சிடம் 6-7 (9/11), 6-4, 3-6 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார். இந்த தோல்வியானது ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தது. 

    இதைத்தொடர்ந்து, அடுத்ததாக கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபனில் நடால் பங்கேற்க இருக்கிறார். மறுபுறம் அவரை வீழ்த்திய கோரிச் அடுத்த சுற்றில், மற்றொரு ஸ்பெயின் வீரரான ராபர்டோ பௌதிஸ்டா அகுட்டை எதிர்கொள்கிறார். 

    மேலும், இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-4 என செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை வென்றார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....