Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முதல்வரின் காலை உணவு திட்டம் - மருத்துவர் ராமதாசு வரவேற்பு

    முதல்வரின் காலை உணவு திட்டம் – மருத்துவர் ராமதாசு வரவேற்பு

    மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, இன்று  (செப்டம்பர் 15) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்.

    இதையும் படிங்க: கருணை வடிவமான காலை உணவு வழங்கும் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்.

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....