Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு - தீட்சிதர்கள் எதிர்ப்பு; அமைச்சர் அதிரடி!

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – தீட்சிதர்கள் எதிர்ப்பு; அமைச்சர் அதிரடி!

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, தருமபுர ஆதீனத்தின் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, அமைச்சர் சந்தித்து பேசினார். தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகளுடன் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த கையோடு, ஆதீன வளாகத்தில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். ஆதீனம் சார்பாக அமைச்சருக்கு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

    ‌அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஆதீன மடாதிபதி ஆகிய இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அச்சமயத்தில், அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சைவத்துடன் தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதினங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் எப்போதும் தலையிடாது என்று கூறினார்.

    சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலைத்துறை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளாது என்று பதிலளித்தார் அமைச்சர். நடராஜர் கோயில் பிரச்சினையில், கோயில் நிர்வாகம் மற்றும் தீட்சிதர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் செயல்படாது. தீட்சிதர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் மற்றும் தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனைகள் என ஏராளமான புகார்கள் தமிழக அரசுக்கு வந்துள்ளது. இந்தப் புகார்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுப்போம். வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை உறுப்பினர்கள் குழு ஆய்வு செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதாக கூறுவது, ஜனநாயக உரிமை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    அறநிலையத் துறையினர் ஆய்வின் செய்யும் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல் துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம் மற்றும் மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    மின் உற்பத்தி பாதிப்பு; மீண்டும் ஆரம்பிக்கப் போகிறதா மின்தடை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....