Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

    நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

    நரிக்குறவர் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசுக்கும், முதல்வருக்கும் அம்மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

    இந்நிலையில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

    இதனை வரவேற்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன். எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக நாடாளுமன்ற மக்களவையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். நரிக்குறவர் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். 

    இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

    சினிமா பாடலுக்கு நடனமாடியதால் பெண் காவலர்களுக்கு வந்த பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....