Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - பும்ரா இல்லையா?

    ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு – பும்ரா இல்லையா?

    2022-ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கிரிக்கெட் வாரியம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 1984-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆசியக் கோப்பை தொடரானது 50 ஓவர், 20 ஓவர் என இரு வகைகளிலும் நடைபெறும். 

    இதுவரையில், இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. மேலும், நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பைப் தொடர் முன்னதாக இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில், 20 ஓவருக்கான ஆசிய கோப்பை தொடர் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளனர்.

    அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி: 

    ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு அணியில் இடம் பெற்றுள்ளனர். 

    குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....