Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு

    தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ திரைப்படம் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு

    தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ திரைப்படம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

    அவெஞ்சர் பட இயக்குநர்களாகிய, அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோரின் இயக்கத்தில், கிறிஸ் எவென்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம்தான், தி கிரே மேன். 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படமானது, நெட்ப்ளிக்ஸில் வெளியானது. 

    இந்நிலையில், தமிழ் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவிப்பர். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள ஆங்கிலப்படமான ‘தி கிரே மேன்’ படம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    அவரது பதிவில், “நேற்று ‘தி கிரே மேன்’ படம் பார்த்து மகிழ்ந்தேன். நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்தது குறித்து பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷ் மேலும் பல பெருமைகளை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வேண்டுமென அவரை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular