Wednesday, May 8, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சவுதி அரேபியாவில் துணிவு திரைப்படத்திற்கு தடையா?

    சவுதி அரேபியாவில் துணிவு திரைப்படத்திற்கு தடையா?

    நடிகர் அஜித்தின் துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்தான், துணிவு. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வைத் திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் – போனி கபூர்- அஜித்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.

    இதனால், துணிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகளவில் உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கிக்கொண்டே வருவதால் துணிவு திரைப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    துணிவு திரைப்படத்தில் திருநங்கைகள் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதன் காரணமாக அப்படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தடை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    முன்னதாக, நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தேறிய பும்ரா.. ஆனாலும் இந்திய அணியில் இடமில்லையா – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....