Sunday, May 5, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்குடும்பம் + தாய்பாசம்... வாரிசு டிரெய்லர் எப்படி இருக்கு? - ரசிகர்கள் கணிப்பு சரியா..

    குடும்பம் + தாய்பாசம்… வாரிசு டிரெய்லர் எப்படி இருக்கு? – ரசிகர்கள் கணிப்பு சரியா..

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

    நடிகர் விஐய் நடிப்பில் உருவாகி, பொங்கலுக்கு வெளிவர தயாராகவுள்ள திரைப்படம்தான், வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இத்திரைப்படத்தை இயக்க, தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

    தொடக்கத்தில் ‘தளபதி-66’ என்ற தற்காலிக பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு பின்னாளில் வாரிசு என்ற பெயர் சூட்டப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ‘ தி பாஸ் ரிட்டர்ன்ஸ்’ என்ற டேக் லைன் இடம்பெற்றிருந்தது. 

    இதைக் கொண்டு ‘விஜய் குடும்பத்தை விட்டு தூரமாக வசித்து வருவார், ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பிறகு தன் குடும்பத்துக்கு திரும்புவார். இதற்குப் பிறகு நிகழும் கதையே வாரிசு படத்தின் கதை’ என்று பலர் தெரிவித்தனர். அதன்படியே, திரைப்படத்தின் செய்திகளும் இருந்தன. 

    மேலும், வாரிசு திரைப்படத்தின் இடம்பெற்ற ‘சூல் ஆஃப் தி வாரிசு’ பாடலும் பரவி வந்த கருத்தை முன்மொழிவதாக அமைந்தன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளிவந்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரெய்லரும் அப்படியானதாகவே இருக்கிறது. 

    பக்கா ஸ்டைலிஷாக விஜய் டிரெய்லர் முழுவதும் காண்போரை ஆட்கொள்கிறார். ராஷ்மிகா மந்தனாவும் கவரும் வகையிலேயே டிரெய்லரில் உள்ளார். எமொஷனல், நகைச்சுவை, ஆக்‌ஷன் எல்லாம் சரிவிகித அளவில் இருப்பதாகவே இருக்கிறது. 

    தமிழ்த் திரைப்படங்களை பொறுத்தவரையில் சமீப காலமாக குடும்பம் சார்ந்த கதைகள் தற்போதைய காலக்கட்டத்தில் பெரிய அளவில் வெளியாகவில்லை. வெளியானாலும், அவை பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்படியான சூழலில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் மூலம் எடுத்துள்ள ரிஸ்க் என்பது பெரிய ஒன்றே. 

    வாரிசு திரைப்படத்தின் அடிநாதம் பழக்கப்பட்டது என்றாலும், அதை தரும் விதம் அழகாக, ரசிக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் பொங்கலன்று வெளியாகவுள்ள வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்த கொண்டாட்டம் நீளுமா அல்லது பொங்கலோடு முடியுமா என்பது திரைப்படம் வெளியான பிறகே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    மாஸூம் க்ளாஸூம் சேர்ந்த ‘ஏகே’ – துணிவு புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....