Friday, April 26, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2023; மினி ஏலத்தில் பங்கேற்க இவ்வளவு வீரர்கள் பதிவா? - வியப்பில் ரசிகர்கள்

    ஐபிஎல் 2023; மினி ஏலத்தில் பங்கேற்க இவ்வளவு வீரர்கள் பதிவா? – வியப்பில் ரசிகர்கள்

    2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். 

    இந்தியாவில் நடத்தப்படும் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3-ஆவது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. 

    அதன்படி, வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. மேலும், மினி ஏலத்தில் பங்குபெறுவதற்காக வீரர்களும் தங்களின் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். 

    அந்த வகையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 714 பேர் இந்திய வீரர்கள், 277 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த வீரர்கள் மினி ஏலத்தில் 2 கோடி ரூபாய் பேண்ட், 1.5 கோடி ரூபாய் பேண்ட், 1 கோடி ரூபாய் பேண்ட் மற்றும் 50 லட்சம் ரூபாய் பேண்ட் என வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுமா? – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....