Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் மலை இடுக்கில் சிக்கித்தவித்த இளைஞர் மீட்பு 

    கேரளாவில் மலை இடுக்கில் சிக்கித்தவித்த இளைஞர் மீட்பு 

    கேரளாவில் மலை இடுக்கில் 43 மணி நேரத்திற்கு மேலாக சிக்கித் தவித்த இளைஞரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது.

    babu

    பாலக்காடு மாவட்டம் மலம்புழாவை சேர்ந்த பாபு என்பவர் தன் நண்பர்களுடன் கடந்த 7ம் தேதி மலை ஏற்றத்திற்காக குறும்பச்சி மலைக்கு சென்ற போது நடுவழியில் கால் இடறியதில் உருண்டு  குறும்பச்சி சென்றபோது நடுவழியில் கால் இடறியதில் அவர் உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் விழுந்தார்.  

    babu struck

    அவருடன் வந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்க அவர்களும் விரைந்து வந்து தேடிப் பார்த்தனர். அனால் அவர்களால் பாபு இருக்கும் இடம் கண்டுபிடிக்க இயலவில்லை. இடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வியடைந்தது.binarai vijayan விலங்கு நடமாட்டமுள்ள மலை இடுக்கில்  40 மணி நேரம் உணவு தண்ணீர் இன்றி குளிரில்பு உயிருக்கு போராடி வந்த பாபுவை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று பலவாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல் அறிந்ததும் அவர் ராணுவத்தை உதவிக்கு நாடினார்.

     வெலிங்டன் ராணுவ மையம் மற்றும், சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மீட்புப்பணி வீரர்கள் விரைந்தனர். மேலும் பெங்களூரிலிருந்து பாராச்சூட் வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மலைக்கருகே ஹெலிகாப்டர் இயங்க இயலாததால் ராணுவ வீரர்களே களத்தில் இறங்கி, கயிறு கட்டி மலை இடுக்கில் சிக்கிருந்த பாபுவை மீட்டனர். அருகிலுள்ள கஞ்சிக்கோடு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பாபுவை அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். babu rescuedஅவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 43 நேர போராட்டத்திற்கு பின் தனது உயிரைக் காப்பாற்றிய ராணுவ வீரர்களை நன்றி தெரிவிக்கும் விதமாக கட்டி தழுவினார். அவருடைய உடல்சோர்வு, மனசோர்வு எல்லாத்தையும் கடந்து ராணுவ வீரர்களுடன் அவர் ஆற்றிய உரையாடல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு போராடிய பாபுவை காப்பாற்றியதற்காக கேரள முதல்வர் பினராய் விஜயன் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....