Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமியாமி ஓபன் சாம்பியன்கள் : மியாமி ஓபன் தொடரில் பட்டம் வென்ற 18 வயது இளைஞர்!

    மியாமி ஓபன் சாம்பியன்கள் : மியாமி ஓபன் தொடரில் பட்டம் வென்ற 18 வயது இளைஞர்!

    உலக டென்னிஸ் அரங்கில் முன்னணிப் போட்டிகளில் ஒன்றான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் நடந்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று அதன் அனைத்துப் பிரிவுகளுக்குமான இறுதிபோட்டிகள் நடைபெற்று புதிய சாம்பியன்கள் உருவாக்கியுள்ளனர். 

    ஏப்ரல் 2ல் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் 35வது இடத்தில் இருக்கும் ஜப்பான் நாட்டின் நயோமி ஒசாகா, உலகத்தரவரிசையில் முதல் இடத்தில்  இருக்கும் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். 

    இந்த ஆட்டத்தின் முடிவில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர்செட்களில் மிக எளிதாக நயோமி ஒசாகாவைத் தோற்கடித்து மியாமி ஓபன் 2022 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இது அவருக்கு க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெல்ல நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். 

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகத்தரவரிசையில்  11வது இடத்தில் இருக்கு ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, நார்வே நாட்டைச் சேர்ந்த உலகத்தரவரிசையில் 211வது இடத்தில் கேஸ்பர் ரூடை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 7-5, 6-4 என்ற நேர்செட்களில் கேஸ்பர் ரூடை தோற்கடித்து பட்டம் வென்றார் அல்கராஸ் கார்ஃபியா.

    இந்த ஆட்டத்தில் ஆறு எஸ் சர்வீஸ்களை போட்டுத் தாக்கி கேஸ்பர் ரூடை திணறடித்தார் அல்கராஸ் கார்ஃபியா. பட்டம் வென்ற இவருக்கு வயது வெறும் 18 தான் ஆகிறது. இதன் மூலம் மியாமி ஓபன் தொடரில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அல்கராஸ் கார்ஃபியா. 

    மற்றொரு பிரிவான ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டமும்  நேற்று நடைபெற்றது. இதில் நெதர்லாந்தைச் சேர்ந்த வெஸ்லி கூல்காஃப் மற்றும் பிரிட்டனின் நீல் குப்ஸ்கி இணையும், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மற்றும் போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்ஸ் இணையும் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் 7-6 ( 7-5 ), 6-4 என்ற செட்கணக்கில் எளிதாக வென்று ஜான்இஸ்னர் மற்றும் ஹுபர்ட் ஹர்காக்ஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது. 

    இந்த தொடரின் இறுதி ஆட்டமாக பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதியாட்டம் ஏப்ரல் 4, இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸ் மற்றும் வெரோனிகா குடெர்மெடோவா இணையுடன் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வெரா ஸ்வோனரேவா மற்றும் லாரா செஜ்மண்ட் இணை மோதியது. 

    இந்த ஆட்டத்தில் முடிவில் 7-6 ( 7-3 ), 7-5 என்ற செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியது ஜெர்மனியின் வெரா ஸ்வோனரேவா மற்றும் லாரா செஜ்மண்ட் இணை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....