Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

    உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

    செயற்கைகோளில் பலவிதங்கள் உள்ளன. அதுவும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்ததும் புதுவிதமான பல செயல் அம்சங்களை விஞ்ஞானிகள் புகுத்தியும் வருகின்றனர். அப்படி இருக்க உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள். 

    உலகத்தின் மிகச் சிறிய செயற்கைக்கோள் கலாம் சாட் என்ற செயற்கைக் கோள் ஆகும். இதனை உருவாக்கியவர் இந்திய நாட்டின் மிகச் சிறிய இளம் விஞ்ஞானியான ரிபாத் சாருக் என்னபர் ஆவர். இவர் தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டியில் பிறந்தவர். 

    நாசா வருடா வருடம் நடத்தும் பள்ளிச் சிறுவர்களுக்கான திட்டமைப்பில் இவர் கலந்துக் கொண்டு தனது முழு முயற்சியிலேயே வெற்றியும் பெற்றுள்ளார். இவர் தனது குழுவுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்துல் காசிப், கோபிநாத், தானுசுக் திவேட்டி, வினய் எசு பரத்வாஜ் மற்றும் யாக்னா சாய் ஆகியவர் இக்குழுவில் அடங்குவர். இந்தக் குழுவின் தலைவராக ரிபாத் சாருக் இந்த சிறிய ரக செயற்கை கோளான கலாம் சாட் என்ற செயற்கை கோளை தயாரித்துள்ளார். 

    கலாம் சாட் செயற்கைக் கோள் வெறும் 64 கிராம் எடை மட்டுமே கொண்டது. 3d பிரின்டிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கார்பன்  ஃபைபரைக் கொண்டு ரிபாத் சாருக் குழுவினர் இந்த சிறிய வகை செயற்கைக் கோளான காலம் சாட் செயற்கை கோளை உருவாக்கியுள்ளனர். 

    எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்ட நாசா நடத்திய இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பாக இந்த ஒரு குழு மட்டுமே கலந்த கொண்டு வெற்றிபெற்று, இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளனர் ரிபாத் சாருக் குழுவினர். முதல் போட்டியிலேயே வெற்றியையும் படைச்சாற்றி உள்ளனர். மேலும் 80 வகையான மாதிரிகளில் இருந்து இந்த ஒரு செயற்கை கோள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. இந்த கலாம் சாட் செயற்கை கோள் நாசாவின் ராக்கெட் அமைப்பிலும் இடம் பிடித்துள்ளது. 

    இந்த மிகச் சிறிய செயற்கைக்கோளுக்கு கலாமின் நினைவாக அவர் பெயரையே சூட்டியுள்ளனர். மிகப் பெரிய சாதனையான உலகின் மிகச் சிறிய செயற்கை கோள் என்ற சாதனையைப் படைத்துள்ளது கலாம் சாட் செயற்கைக்கோள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....