Wednesday, April 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் தரும் உலக வங்கி

    இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் தரும் உலக வங்கி

    உலக வங்கியானது இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த ஒப்புதல் தொடர்பாக உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவுக்கு 1.75 பில்லியன் கடனுதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1.75 பில்லியன் டாலரில் சுகாதரத்துக்கு ஒரு பில்லியன் டாலரும், தனியார் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலரும் ஒதுக்கப்படுவதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய நாட்டின் பொருளாதரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியார் துறை மூலம் நிரப்ப, வளர்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடனானது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். அதோடு, இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தக் கடன் தொகையானது பயன்படுத்தப்பட இருக்கிறது.

    சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலர் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை வழங்கப்படும்.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை: மதுரைக்கிளை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....