Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்இங்கே பாருங்கள்! துரித உணவும் துரத்தும் நோய்களும்!

    இங்கே பாருங்கள்! துரித உணவும் துரத்தும் நோய்களும்!

    நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அதிக கலோரிகள் நிறைந்தே உள்ளன. அது எப்படி? வீட்டில் சமைக்கும் உணவைத் தான் நான் தினமும் உண்கிறேன் என்று நீங்கள் கூறலாம். ஆனால், இப்போது வரும் காய்கறிகள் அனைத்தும் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தது. அது மட்டுமல்ல, நீங்கள் பாஸ்ட் புட் என்ற பெயரில் வெளியே ஏதேனும் ஒரு பொருளை திண்பண்டமாக சாப்பிட்டு இருப்பீர்கள். அதுவும் அதிகமான கொழுப்பு நிறைந்த பொருள்களால் செய்யப்பட்டவைதான். பீட்சா, பர்கர், பிரெஞ்ச் ஃப்ரை என்று ஏகப்பட்டவை கண்ணை மறைத்து வாய்க்கு ருசி ஏற்றி நம்மை உண்ண வைத்து அதற்கேற்ற நோய்களையும் தந்து விடுகின்றன. இது நம்மால் அல்ல, நகர்ப்புற மற்றும் இந்தக் கால போக்குகள் நம்மை மாற்றிவிட்டது. கீழே பாருங்கள் நாம் உண்ணும் உணவுகளால் வரும் நோய்களின் பட்டியல்களை, 

    • செயற்கையான கார்போனேட் பானங்களை குடிப்பதாலும் சீசனிங் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடற் கொழுப்பு அதிகரித்து உடலில் ஆங்காங்கே படியும் கொழுப்பு திட்டுக்களால் வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுகின்றன. 
    • அதிகமான சோடியம் கலந்த பொருள்களை உண்பதால் தான் இதயம் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும் உடற்பருமன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    fast food

    • இதனால், மன அழுத்தமும் பதற்றமும் அதிகரித்து மன நிலையையும் பாதிக்கின்றது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.   
    • இரத்த அழுத்தம், மிதமான உடல் எடை அதிகரிப்பதாலும், உடற் பருமன் ஏற்படுவதாலும் கூட இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
    • மேலும் இதர, கல்லீரல் பிரச்சனைகள், மலச்சிக்கல், எலும்புத் தேய்மானம் போன்றவையும் ஏற்படுகின்றன.
    • துரித உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது கடினம் தான். ஆனால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டால் உடல் ஆரோக்கியம் சீரான நிலையை அடைந்து வாழ்வு சிறக்கும்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....