Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

    பின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

    பின்லாந்து நாடு உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக ஐநா சபை அறிவித்திருந்தது. அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முறை பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் வித்தியாசமான முறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    இயற்கை அழகு கொஞ்சும் நாடு:

    பின்லாந்தில் உள்ள நிலப்பரப்புகள் எழில் மிகுந்த காட்சிகளை கொண்டு உள்ளன. பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமான அழகை கொண்ட நாடு பின்லாந்து. மேலும் இங்கு சுற்றுச் சூழல் மாசுபாடு மிகக் குறைவு. அதுமட்டும் அல்லாமல் காடுகள், மலைகள், ஏரிகள் என அனைத்து விதமான இடங்களும் இயற்கையில் மூழ்கியே இருகின்றன. அங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு சொந்த வீடுகள் உண்டு. இவை அனைத்தையும் பார்க்கும் மக்களின் மனநிலை மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது. 

    ஆண்களும் பெண்களும் சமம்:

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது. இது நம் நாட்டிலும் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மாறுபாடு உண்டு பாருங்கள். ஆண்களுக்கு நிகராக பெண்கள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வேலைக்கு செல்கிறார்கள். அதே போல் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கு குழந்தைப் பிறந்ததும் ஏழு வாரங்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் ஆண்களும் நேரத்தை செலவிடவே இவ்வாறான சட்டங்கள் அங்கு பின்பற்றப்படுகின்றன. 

    சுதந்திரம் அதிகம்:

    அந்நாட்டு மக்களுக்கு சுதந்திரம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் தங்கலாம். யார் தோட்டத்திற்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். அங்கு விளையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் விலையுர்ந்த காய்கள் மற்றும் பழங்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். அனைத்து விதமான இடங்களுக்கும் செல்ல அனுமதி இருப்பதால் மக்கள் இன்னும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் அளவிற்கு மிகவும் பாதுகாப்பான விமான கடவுச் சீட்டை அந்நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர். 

    குற்றங்கள் குறைவு:

    அந்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதால் குற்றங்களும் மிகக் குறைவாகவே இருக்கிறது. மேலும் குற்றங்கள் குறைவு என்பதால் மக்கள் அமைதியாகவும் அவர்களுக்கு பிடித்தார்ப் போலும் வாழ்கிறார்கள். 

    கல்வி மேலாண்மை:

    பின்லாந்து நாட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பது இலவசம். ஒரே கல்விக் கொள்கை முறை தான் பின்பற்றப்படுகிறது. குழந்தைகள் 7 வயதாகும் போது தான் முதல் முறையாக பள்ளியில் சேர்ப்பார்கள். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித வேறுபாடும் இருக்காது. பணக்காரர் முதல் ஏழை வரை அனைத்து மக்களின் குழந்தைகளுக்கும் சமமான கல்வி முறை அளிக்கப்படுகிறது. பள்ளியின் நேரம் 4 மணிகள் மட்டும் தான். மதிப்பெண்கள் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்வதே இல்லை. 14 வயதுக்கு மேல் அதுவும் செய்முறைத் தேர்வாக நடத்தப்படும். அதுவும் குழுக்களாக பிரித்து அவர்களுக்கு பிடித்த ஒன்றையே அவர்கள் செய்வர். 

    இன்னும் பலப்பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. என்ன? உங்களுக்கும் ஆசையாக இருக்கிறாதா பின்லாந்து நாட்டிற்கு செல்ல!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....