Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தப்பி ஓடினாரா விளாடிமிர் புடின்? காரணம் என்னவாக இருக்கும்?

    தப்பி ஓடினாரா விளாடிமிர் புடின்? காரணம் என்னவாக இருக்கும்?

    இரஷ்யா உக்ரைன் போர் பெரும் உச்சத்தை எட்டிய நிலையில், விளாடிமிர் புடின் தனது சொத்துக்களைப் பாதுகாக்கவும் அவரின் பாதுகாப்பிற்காகவும் தப்பி ஓடினார் என பிரபல ஊடகமான சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

    தற்போது இரஷ்யா உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவமும் அந்நாட்டு மக்களும் போரில் கடுமையாக போராடி வருகின்றனர். இது வரை நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தன.

    இந்நிலையில் தான் புடின் தனது சொகுசு கப்பலில் ஏறி கலின்கார்ட் என்ற இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்தக்  கப்பலில் ஏவுகனைத் தாக்குதல் நடத்த எல்லா வசதிகளும் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த இடத்தில் தான் இவரது பெரிய சொகுசு பங்களாவும் இருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.

    மேலும் புடின் போர் தொடங்கிய  நாள் முதல் அவரின் நெருங்கிய வட்டத்திற்குள் மட்டுமே பேசி வருகிறார் என மூத்த  அமெரிக்க தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.Russia President putin

    அது மட்டுமில்லாமல், அவர் அப்படிச் செல்ல மூன்று காரணங்கள் உள்ளன 

    • ஒன்று அவரின் பாதுகாப்பு 
    • இரண்டு அவரின் சொத்துக்களை பாதுகாக்க 
    • மூன்று அணு ஆயுத தாக்குதல்

    அதுமட்டுமில்லாமல் இவர் முன்னாள் சோவியத் யூனியன் உளவுத்துறையின் ஏஜென்ட் ஆக இருந்திருப்பதால் போர் சூழ் நிலையில் தன்னை எப்படி பாதுகாப்பது என்பதையும் எங்கே பதுங்கி இருக்கலாம் என்பதும் புதினுக்கு நன்றாக தெரியும் எனக் கூறப்படுகிறது.

    putin place in satellite viewஅதனால் புடின் அங்கே சென்றிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யா முன்பே “ இப்போர் அணு ஆயுத போராக மாறினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புடின் அணு ஆயுத சோதனைக் கூடத்திற்கு சென்றிருப்பது பல்வேறு குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பி உள்ளது. புடின் சென்ற கப்பல் செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெளிவாக பதிவாகி உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....