Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் 'லியோ' படத்தில் உள்ள ஹெய்சன்பெர்க் யார்? - ரசிகர்கள் தொடர் கேள்வி!

    விஜய்யின் ‘லியோ’ படத்தில் உள்ள ஹெய்சன்பெர்க் யார்? – ரசிகர்கள் தொடர் கேள்வி!

    நடிகர் விஜய்யின் லியோ படத்தின் புரோமோவில் இடம்பெற்றுள்ள ‘பிளடி ஸ்வீட்’ பாடலின் பாடலாசிரியர் சம்பந்தமாக ட்விட்டரில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு புரோமோ வடிவில் நேற்று வெளியானது. 

    இந்தப் புரோமோ அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதுவரையில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை புரோமோ பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘பிளடி ஸ்வீட்’ என்ற பாடல் தனி கவனத்தை ஈர்த்தது. 

    இதைத்தொடர்ந்து, அப்பாடலை இசையமைப்பாளர் அனிரூத் ஸ்டிரிமிங் ப்ளாட்ஃபார்மில் வெளியிடுவதாக அறிவித்து அதன்படியே அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, இப்பாடலுக்கு வரிகளை எழுதியவர் யார் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

    ‘பிளடி ஸ்வீட்’ பாடல் சார்ந்த அறிவிப்பில், பாடலை பாடியவரின் பெயர் (சித்தார்த் பஸ்ரூர்) இடம்பெற்றுள்ளது. ஆனால், பாடல் எழுதியவர் இடத்தில் ஹெய்சன்பெர்க் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், யார் இந்த ஹெய்சன்பெர்க்  என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    முன்னதாக, கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஐ யம் வேஸ்ட்டட் (i am wasted) பாடலையும் இந்த ஹெய்சன்பெர்க்தான் எழுதியுள்ளார். ஆனால், அப்போதும் அவர் யாரென்பது குறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. 

    இந்நிலையில், அந்த ஹெய்சன்பெர்க் என்ற மாற்று பெயரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார் என்றும், இல்லை இசையமைப்பாளர் அனிருத் எழுதியுள்ளார் என்றும் சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

    செல்வராகவனின் பகாசூரன்; வெளியான தீம் மியூசிக் விடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....