Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இவைகள்தான்- தகவல்கள் உள்ளே!

    அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இவைகள்தான்- தகவல்கள் உள்ளே!

    உலக அரங்கில் அணு ஆயுதங்கள் குறித்தான தகவல்கள் தற்போது அதிகம் தேடப்படுபவையாக உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ரஷ்யா உக்ரைனின் மீது போர்த்தொடுத்ததில் இருந்து உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை சரிபார்க்கத் துவங்கிவிட்டனர் என்றே கூற வேண்டும். 

    மேலும், பல நாடுகள் தங்களின் மறைமுக எதிரி நாடுகளிடத்தில் இருக்கும் ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரித்துவைத்துள்ளன. சேகரித்தும் வருகின்றன.  தற்போதைய சூழலின்படி உலகமே அதிர்வுறும் ஆயுதம் என்றால் அது அணு ஆயுதங்களே! 

    அப்படியான அணு ஆயுதங்கள் எந்ததெந்த நாட்டில், எவ்வளவு இருக்கின்றன என்பதைத் தெரிந்துக்கொள்ளவே இந்தக் கட்டுரை. அதன்படி தற்போது இந்த அணு ஆயுதங்களானது அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தன், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளிடத்தில் உள்ளது. 

    அணு ஆயுதங்களின் கணக்கீடுகள் 

    உலகில் மொத்தமாய் 13,400 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் ரஷ்யா மட்டும் மொத்தம் 6257 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அதன்வழியே அமெரிக்காவிடத்தில் 5550 அணு ஆயுதங்கள் உள்ளன. 

    மேலும், பிரிட்டனிடத்தில் 225 அணு ஆயுதங்களும், பிரான்ஸிடம் 290 அணு ஆயுதங்களும், இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும், இஸ்ரேலிடத்தில் 90 அணு ஆயுதங்களும், வட கொரியாவிடத்தில் 50 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. 

    தற்போது இருக்கும் 13,400 அணு ஆயுதங்களில் பெரும்பான்மையான அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் தன்னிடத்தில் கொண்டுள்ளன. 

    இதனால்தான் உலக அரங்கில் இந்த இரு நாடுகளின் மீது மரியாதை, மதிப்பு என்பதையெல்லாம் தாண்டி ஒரு பயம் இருந்துக்கொண்டே வருகிறது. ஏன் இந்த பயம் என்ற கேள்வி உங்களிடத்தில் எழும்புமாயின் அதற்கான பதிலாக இன்று வரை விளங்கி வருகிறது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. 

    ஆம்! அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின்மீது அணு குண்டுகளை வீசி உலகின் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியது. இந்த இரு குண்டுகளின் மூலம், நசுக்கப்பட்ட உயிர்கள் கொஞ்சம் அல்ல என்பதை நாம் அறிவோம். மேலும் அங்கிருந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் அன்றோடு முடியாமல் இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றால்தான் அணு ஆயுதங்கள் என்றாலே, உலக நாடுகள் பயத்தில் இருந்து வருகின்றன. 

    இது உண்மையா? 

    உலக அளவில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் அனைத்து நாடுகளும் தங்களின் உண்மை நிலவரத்தை சொல்லவில்லை என்றே செய்திகள் வருகின்றன. 

    வல்லரசு நாடுகள் அணு ஆயுத குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....