Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப் ஸ்டேட்டஸில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? - அதிர வைத்த தகவல்!

    வாட்சப் ஸ்டேட்டஸில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? – அதிர வைத்த தகவல்!

    இனி வாட்சப் ஸ்டேட்டஸில் போட்டோ, வீடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    இந்த வகையில், வாட்சப் நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி வாட்சப் ஸ்டேட்டஸில் போட்டோ, வீடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்று அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த அம்சம் மிக விரைவில் அனைத்து விதமான பயனர்களுக்கு வந்துசேரும் என்று வாட்சப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இனியாவது ஒளிருமா விக்ரமின் துருவ நட்சத்திரம்? – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....