Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

    வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

    வேலைக்காகவும் படிப்பிற்காகவும் செல்லும் இளைஞர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைத்ததுண்டா? இங்கு வேலைக் கிடைக்காமல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆண்களும் பெண்களும் இந்த விகிதத்தில் சமமானவர்கள் தான். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.

    • ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் மன வெறுப்புடன் தான் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் இளைஞர்கள். காரணம் புது இடம் எப்படி இருக்கும் என்ற ஆவலும் பெற்றோர்களையும் நண்பர்களையும் பிரியப் போகிறோம் என்ற எண்ணமும் தான். 
    • அனைத்தையும் பொறுத்து வெளிநாட்டுக்கு சென்ற பிறகு முதலில் வரும் எண்ணம், புது இடம் ஆயிற்றே எப்படி இருக்கப் போகிறோம்? எப்படி பேசப் போகிறோம்? யார் நம்முடன் பழகப் போகிறார்கள்? என்ற எண்ணற்ற குழப்பங்கள் பல வருவதுண்டு. 
    • அப்படி எல்லாம் வந்து மனம் சிறிது அமைதி அடைந்தாலும், பிறகு தான் ஆரம்பிக்கிறது உண்மையான மன உளைச்சலும் ஏக்கமும், வீட்டில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்? அம்மா சாப்பிட்டார்களா அப்பா வீட்டுக்கு வந்து இருப்பாரா? தங்கை பள்ளி சென்றிருப்பாளா இல்லையா? என்ற கேள்விகளும் இதற்கு முன் தனது குடும்பத்துடன் இருந்த நினைவுகளை நினைத்து தான் நாளும் பொழுதையும் கடந்து செல்வர். 
    • அந்த நாட்டில் உள்ள சூழலும் சட்ட விதிகளும் முதலில் பின்பற்ற வேண்டும் என்பது சிலகாலம் கசக்கும், சில சட்டங்கள் இனிக்கும் அப்படி இப்படி என்று இரண்டு மாதங்கள் ஓடினால் எல்லாம் பழகிவிடும். 
    • புதிய நண்பர்கள் புதுமுக அறிமுகங்கள் என எல்லாம் புதியதை மனம் ஏற்று சற்று அமைதி இருந்தாலும் நாம் நம் நாட்டில் இருந்தால் இந்நேரம் என்ன செய்துக் கொண்டிருப்போம்? என்ற எண்ணமும் மனதில் வரத்தானே செய்யும். 
    • வேலைக்காக சென்றவர்களின் நிலைமை சற்றே வேறு தான் வேலைக்களைப்பில் உண்ணக்கூட தோன்றாமல் உறங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
    • அவர்கள் மன நிலை என்னவாக இருக்கும், கடினப்பட்டு தான் ஆக வேண்டும் இன்னும் சில காலம் தான் என்றே வாழ்வும் ஓடும். 
    • தான் உண்ணாமல் உறங்காமல் வேலை செய்து அம்மாவிற்கு பணம் அனுப்பும் மகனின் மனநிலையில் அம்மா இருப்பார்கள் நமக்காக! அவர்களுக்காக சிறிது காலம் வேலை செய்துவிட்டு பிறகு அவர்களுடனே இருக்கலாம் என்ற என்ன தான் நிலைக்கும். 
    • திருமணம் ஆகி சில நாட்களிலேயே மனைவியை பிரிந்த இளைஞர்களின் கதை கேட்டால் இன்னும் மனம் வலிக்கும், கைப்பேசியிலேயே காலம் கடந்து தான் செல்லும். அவர்களின் மனநிலையில், அவள் தனியாக எப்படி இருப்பாள்? சரியாக பேச கூட நேரமில்லாமல் போயிற்றே! என்ற ஏக்கங்கள் பலவிருக்கும். 
    • மனைவியின் வளைகாப்புக்கு, பிரசவ நேரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற மனவலிகள் இன்னும் எத்தனையோ? என் பாப்பா எப்படி இருப்பாள்? என் பையனுடன் விளையாட முடியவில்லையே! தங்கையின் திருமணத்துக்கு கூட உடன் இருக்க முடியவில்லையே! என்ற மனவலிகளும் சற்று கூடித்தான் போகும். இவற்றுக்கு எல்லாம் ஒரு ஊடுபொருளாக இருப்பது கைப்பேசி மட்டும் தான், வீடியோ அழைப்புகளில் தான் முகம் பார்த்து மகிழ்கின்றனர். 
    • வீட்டில் உள்ள அனைவரையும் பிரிந்து இருப்பது படிப்பிற்காக சென்றவர்களுக்கு மனக் கசப்பை உண்டாக்கும். மேலும் அவர்களின் படிப்புக்காக செலவு செய்த பணத்தின் கடனை நினைத்து நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணமும் நம் பெற்றோர்கள் எப்படி இந்தக் கடனை அடைப்பார்கள் என்ற மனநிலையிலும் தான் எப்போதும் இருக்கும்.

    என்ன சொல்லி என்ன? வெளிநாடு செல்பவர்களின் மனநிலை சிறிது இனித்தும் சற்றுக் கசத்தும் தான் இருக்கும். 

    இதையும் படியுங்கள்… பயணத்தின் போது தேவைப்படும் முக்கிய பொருள்கள் என்னவென்று தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....