Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும்? துல்லியமான வீடியோவை வெளியிட்டு சீனா அசத்தல்

    சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும்? துல்லியமான வீடியோவை வெளியிட்டு சீனா அசத்தல்

    சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த காணொளி காட்சிகளை சீனா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீன அரசு பல்வேறு  விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிலவுக்கு சுற்றுலா செல்லவும் தற்போது சீனா அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    விண்வெளி ஆராய்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அப்படி ஒரு ஆய்வினை சீனா மேற்கொண்டு அதற்கான காணொளியை வெளியிட்டுள்ளது. அது தான் சூரியன் பற்றிய ஆய்வு. சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் தெரியுமா? 

    சீனாவின் அறிவியல் அகாடமி, கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு 1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.

    இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்டது. மேலும் இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

    தற்போது இந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும்  இதற்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....