Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு பலன் கொடுக்குமா? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு பலன் கொடுக்குமா? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் கூடும். சில தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு இதனால் மன வருத்தமும் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அலுவலகத்தில் சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். அலுவலக காரியங்களை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். வீடு நிலம் போன்ற சொத்துகளை வாங்க வாய்ப்பு உண்டு. 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. குடும்ப முடிவுகளை எடுப்பதில் சற்று தெளிவு தேவை. தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பேசுகையில் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும். மேலும் இதற்கான பாராட்டை நீங்கள் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். அலுவலகம் செல்லும் பெண்கள் சற்று மகிழ்ச்சியாக இருப்பர். 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு திருப்தி இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் இருக்கும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு வெற்றித் தரும். தொழில் சற்று நிதானமான போக்குடன் காணப்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தகவல் மற்றும் தொழிநுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, எதிர்பாராத நல்ல செய்திகள் வந்துச் சேரும் நாட்களாக இருக்கின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கை துணையுடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். தந்தையுடன் சுமூகமான நிலையை கடைபிடிப்பது அவசியம். அலுவலகத்தில் வேலைச்சுமை கூடும். பதவி மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, சுமூகமான சூழ்நிலை நிலவும். சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. சில தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும். 

    மீனம்:

    மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மிக வழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்க கூடும். சக பணியாளர்களிடம் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் லாபம் ஓரளவுக்கு இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வாரத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....