Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை சீராகும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். சில திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு மேலும் நன்மையைக் கொடுக்கும். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலையே காணப்படும். யாரிடமும் வாக்கு தராமல் இருப்பது நல்லது. 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் எழலாம். நண்பர்களின் உதவி கை கொடுக்கும். அலுவலக நண்பர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். தொழிலில் லாபம் ஈட்ட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருப்பதே நல்லது. 

    மகரம்:

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அலுவலகத்தில் எப்போதும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். துணிந்து செயல்படுவதில் சற்று யோசனை தேவை. தெளிவான முடிவுகளை எடுக்க சற்று சிரமம் உண்டாகலாம். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிடயே சில கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். அலுவலக வேலைகளில் சிறு கூடுதல் கவனம் தேவை. தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். பிறரை பற்றி தெரிந்துகொள்ளாமல் முடிவு எடுப்பது சிக்கலை உண்டாகுக்கும். 

    மீனம்:

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். தொழிலில் நீங்கள் உழைப்பதற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....